மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பானின் அபிவிருத்தி ஸ்தாபனம் 500 மில்லியன் ரூபாய்களை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பான சந்திப்பு ஒன்று (24/10/2012) களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இடம்பெற்றது.இந்த அபிவிருத்திபணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும், எதிர்வரும் 2014ம் ஆண்டு இந்த பணிகள் நிறைவடையும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டின் சுகாதார சேவைகளின் அபிவிருத்திக்காக, ஜப்பானின் அபிவிருத்தி ஸ்தாபனம் 4000 கோடி ரூபாய்களை வழங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய களுவாஞ்சிகுடி வைத்தியசாலையின் தோற்றம் நேற்றைய தினம் JICA திட்டம் தொடர்பாக இடம் பெற்ற சந்திப்பு
0 comments:
Post a Comment